திருகோணமலை மாவட்டத்தில் உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பாடநெறியை முடித்த பட்டதாரி பயிலுனர்களுக்கு 52 பேருக்கு மாவட்ட அரசாங்க அதிபர் மேஜர் ஜெனரல் திஸ்ஸ ரஞ்சித் டி. சில்வாவினால் நேற்று நியமனக்கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
திருகோணமலையில் மாவட்டத்தில் மத்திய அரசாங்கத்தின் கீழ் காணப்படும் அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களிற்கே இவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
ஒரு வருட கால பயிற்சிக்காலத்திற்கு இவர்கள் உட்படுத்தப்படுவார்கள். பயிற்க்காலத்தின் போது கொடுப்பனவாக மாதாந்தம் 10,000 ரூபா வழங்கப்படும். பயிற்சியை முடித்ததன் பின்னர் இவர்கள்,அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நிரந்தர நியமனத்திற்கு உள்வாங்கப்படுவார்கள்.