தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று பதவியேற்கின்றது.இதனிடையே, தேசிய அரசாங்கத்தின் 48 அமைச்சரவை அமைச்சர்கள் 45 பிரதி மற்றும் ராஜாங்க அமைச்சர்களை தெரிவு செய்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று முன்வைக்கப்பட்ட யோசனை 127 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
யோசனைக்கு ஆதரவாக 143 வாக்குகளும், எதிராக 16 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
யோசனைக்கு ஜே.வி.பி, தேசிய சுதந்திர முன்னணி, மக்கள் ஐக்கிய முன்னணி, நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில ஆகியோர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு, நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் சிலர் சபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை.
இதற்கமைய, அமைச்சர்கள், ராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களின் மொத்த எண்ணிக்கை 93 ஆகும்
அமைச்சரவை பதவியேற்கும் நிகழ்வு