தேசிய அடையாள அட்டைகளை விரைவாகப் பெற சிறப்பு முன்பதிவு நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, 011 5 226 126 அல்லது 011 5 226 100 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தொடர்புடைய திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்யலாம்.
மேலும், ஏற்கனவே விண்ணப்பங்களை ஆட்பதிவுத் திணைக்களத்திடம் சமர்ப்பித்த விண்ணப்பதாரர்கள் இந்த தொலைபேசி எண்களை அழைத்து தேசிய அடையாள அட்டையை விரைவாக வழங்கக் கோரலாம்.
இதற்கிடையில், சாதாரண சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டைகளைப் பெற விரும்பும் நபர்கள் சம்பந்தப்பட்ட விண்ணப்பங்களை கிராம அலுவலகர் மூலம் பிரதேச செயலகத்தின் அடையாள அட்டை பிரிவுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்தை திணைக்களத்தில் சமர்ப்பித்த பின்னர், தேசிய அடையாள அட்டை அச்சிடப்பட்டு பதிவுத் தபால் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்படும் என்று ஆட்பதிவுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.