தேசியமட்டத்தில் தங்கம் வென்ற பண்டத்தரிப்பு யசிந்தா றோ.க.த.க. பாடசாலை அணிக்கு பராட்டுவிழா

பண்டத்தரிப்பு யசிந்தா றோ.க.த.க பாடசாலையிலிருந்து தேசிய மட்ட கபடிப் போட்டியில் பங்குபற்றி தங்கப் பதக்கம் சுவீகரித்த அணிக்கான பாராட்டு விழா சிறப்பாக இடம்பெற்றது.

கடந்த வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு பாடசாலை அதிபர் அருட்சகோதரி மேரி லாசர் தலமையில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன.

kabady-pandaththareppu-1

15 வயதிற்குட்பட்ட பெண்கள் கபடி அணியே தேசிய மட்டத்தில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது. கபடி போட்டியில் பண்டத்தரிப்பு யசிந்தா றோ.க.த.க பாடசாலைக்கு கிடைக்கும் முதலாவது தேசிய மட்ட தங்கப் பதக்கம் இதுவாகும்.

பண்டத்தரிப்பு சந்தியிலிருந்து பாண்ட் வாத்தியங்கள் சகிதம் ஊர்வலமாக மாலை அணிவித்து வெற்றிக்கு காரணமான வீராங்கனைகளும் விருந்தினர்களும் அழைத்து வரப்பட்டதை தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமாகின.

வாழ்த்துரைகள் சண்டிலிப்பாய் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ச.சிவானந்தராஜா, வலிகாமம் வலய உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி கோசலை, வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் க.உஷாந்தன், ஹென்றியரசர் கல்லூரி அதிபர் வண ஜேசுதாசன் அடிகள், யாழ்.மாவட்ட விளையாட்டுத்துறை அதிகாரி எம்.ஆர்.மோகன், ஈ.பி.டி.பி மானிப்பாய் பிரதேச சபை எதிர்கட்சித் தலைவர் வெலிச்சோர் அன்ரன் ஜோன்சன் உள்ளிட்ட பலர் வாழ்த்துரைகளை வழங்கினர்.

Related Posts