தேசியமட்டச் சம்பியனானது யாழ்.பல்கலை அணி

இலங்கை பல்கலைக்கழகங்களுக்கு இடையே தேசிய மட்டத்தில் நடைபெற்ற உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் தென்கிழக்குப் பல்கலைக அணியை வென்று தேசிய மட்டச் சம்பியானானது யாழ்ப்பாணம் பல்கலைக்கழக அணி.

uni-football-team

இலங்கை பல்கலைக்கழகங்களுக்கு இடையே தேசியமட்டத்தில் நடைபெற்ற ஊதைபந்தாட்டப் போட்டியின் இறுதிப்போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் தென்கிழக்குப் பல்கலைக்கழக அணியும் யாழ்ப்பாணம் பல் கலைக்கழக அணியும் மோதிக்கொண்டன.

போட்டி ஆரம்பமாகிய சில நிமிடத்தில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வீரர் ஞானரூபன் தனது அணிக்கான முதலாவது கோலை பெற்று எதிரணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் போட்டி மிகவும் விறுவிறுப்படைந்தாலும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக அணி வீராகள் எதிரணியை கலங்கடிக்கும் வகையில் தமது ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

அவர்களுக்கு சளைக்காது தென்கிழக்கு பல் கலைக்கழக அணி எதிர்த்து விளையாடிய போதிலும் மீண்டும் ஒரு கோலை ஞானரூபன் பெற்றுக்கொண்டார்.

இந்நிலையில் முதல் பாதி ஆட்டம் முடிவடைந்தது. இரண்டாம் பாதி ஆட்டம் மீண்டும் தொடங்கியதும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழ வீராகள் தொடர்ந்து எதிரணியினரின கோல் பரப்பை ஆக்கிரமித்தபோதிலும் கோல்கள் எதனையும் பெறமுடியாதவாறு எதிரணியினர் தடுத்து விளையாடினர்.

இந்த நிலையில் இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல்கள் எதனையும் பெறாமல் ஆட்டம் முடிவடைந்தது. ஆட்ட நிறைவில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக அணி 02:00 என்ற கோல் கணக்கில் தென்கிழக்கு பல்கலைக்கழக அணியை வெற்றி பெற்று தேசிய மட்டத்தில் பல்கலைக்கழக சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டது.

போட்டியின் ஆட்டநாயகனாகவும் தொடர் ஆட்டநாயகனாகவும் யாழ்ப்பாணம் பல் கலைக்கழக அணி வீரன் ஞானரூபன் தெரிவு செய்யப்பட்டார்.

இதேவேளை – மூன்றாம் இடத்துக்காக இடம்பெற்ற ஆட்டத்தில் கிழக்குப் பல்கலைக்கழகமும் வயம்ப பல்கலைக்கழகமும் மோதிக் கொண்டன. இந்த ஆட்டத்தில் கிழக்குப் பல்கலைக்கழம் 01:00 என்ற கோல் கணக்கில் வயம்ப பல்கலைக்கழத்தை வெற்றி பெற்று மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.

Related Posts