2018ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களை தேசியப் பாடசாலைகளில் தரம் 6இல் இணைப்பதற்கான வெட்டுப்புள்ளியை கல்வி அமைச்சு வெளியிட்டது.
வடக்கில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரிக்கான வெட்டுப்புள்ளி 176 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி ஆகிய இரண்டுக்கும் 164 புள்ளிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை கோணேஸ்வரா கல்லூரிக்கு 162 புள்ளிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வடக்கில் பெண்கள் பாடசாலைகளில் பருத்தித்துறை பெண்கள் உயர்தரப் பாடசாலைக்கு 171 புள்ளிகளும் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலைக்கு 167 புள்ளிகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கிழக்கில் மட்டக்களப்பு வின்சன்ற் பெண்கள் உயர்தரப் பாடசாலைக்கு 173 புள்ளிகளும் கல்முனை மஹமூட் பெண்கள் பாடசாலைக்கு 168 புள்ளிகளும் திருகோணமலை சிறி சண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு 168 புள்ளிகளும் மட்டக்களப்பு சென். சிசிலியா மகளிர் கல்லூரிக்கு 164 புள்ளிகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.