தேசம் என்ற நிலைப்பாட்டை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒருபோதும் கைவிடப்போவதில்லை- கஜேந்திரகுமார்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக மாநாடு இன்று யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்றது. மேற்படி மாநாட்டில் இரண்டு விடயங்கள் தொடர்பில் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களால் தௌிவு படுத்தப்பட்டது.

முதலாவது யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இராணுவம் மேற்கொண்டதாகக் கூறப்படும் குற்றங்கள் தொடர்பில் ஒரு சில விசாரணைகளை நாடத்தி சர்வதேச மட்டத்தில் இராணுவத்தின் நற்பெயரை பாதுகாக்க வேண்டும் என்று ஜனாதிபதி மற்றும் முக்கிய அமைச்சர்கள் கூறிவருகின்றமை தொடர்பிலும்
இரண்டாவது இன்றய தினம் வெளிவந்த பத்திரிகை ஒன்றில் தேசம் என்ற கோட்பாட்டை கைவிடுவதற்கு கஜேந்திரகுமார் இணங்கினார் என்ற கருத்துப்பட வெளியாகியுள்ள செய்தி தொடர்பிலும் கருத்து தெரிவிக்கப்பட்டது. இவ்விடயத்தில் தேசம் என்ற நிலைப்பாட்டை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒருபோதும் கைவிடப்போவதில்லை என்றும் அது சமரசத்திற்கு அப்பாற்பட்டது. என்றும் அந்நிலைப்பாட்டில் தமது கட்சி எந்த விட்டுக்கொடுப்பையும் எந்தச் சந்தற்பத்திலும் மேற்கொள்ளாது என்பதனையும் தெளிவுபடுத்தினார். மேலும் குறித்த ஊடகத்தில் வெளியான செய்திபோன்று எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் மேற்படி ஊடகவியலாளர் மாநாட்டில் கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் அவர்களும் உடனிருந்தார்.

Related Posts