Ad Widget

தேங்கி நின்ற வெள்ளப் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுத்த இளைஞர்கள்

யாழ்ப்பாணம் சுதுமலை ஜே-129 கிராம சேவகர் பிரிவில் அண்மையில் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் வழிந்தோட முடியாத நிலையிலிருந்த நீரோடும் வாய்க்கால் ”நமக்காக நாம்” அமைப்பினரின் முயற்சியால் நேற்றுப் புதன்கிழமை (18-11-2015) காலை சீரமைக்கப்பட்டது.

நீரோடும் வாய்க்காலில் இடப்பட்ட குப்பைகள், கழிவுகள் காரணமாகவும் பற்றைகள் சூழ்ந்திருந்தமையாலும் நீரோட்டம் தடைப்பட்டிருந்த சேர்.கொத்தலாவல திட்ட வாய்க்கால் பகுதி J/129 பிரிவு இளைஞர் கழக தலைவர் ஜீ.சஜீவன் விடுத்த வேண்டுகோளையேற்று ”நமக்காக நாம்” அமைப்பினரால் சீர்செய்து கொடுக்கப்பட்டது.
இதன்மூலம் சுமார் 140 பிரதேச குடும்பங்கள் நன்மையடைந்துள்ளனர்.

கிராமசேவகர், பிரதேச சபை, பிரதேச செயலகம் என அனைத்துப் பொறுப்பு வாய்ந்த பிரிவுகளுக்கும் தெரியப்படுத்தியும் அதிகாரிகள் எவரும் நடவடிக்கை எடுக்க முன் வராத நிலையில் சுமார் 50 மணித்தியாலங்களாக ஓடாது காணப்பட்ட நீர் ”நமக்காக நாம்” அமைப்பினரால் வடிந்தோட வழிசெய்யப்பட்டமை முன்னுதாரணமான செயற்பாடெனப் பலரும் பாராட்டியுள்ளனர்.

இதே வேளை அண்மையில் பெய்த கடும்மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் ”நமக்கா நாம்” அமைப்பினர் பல்வேறுபட்ட உதவிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

namakkaka-naam-3

namakkaka-naam-2

namakkaka-naam-1

Related Posts