தேங்காயின் விலை ரூ.100ஆக உயரும்!

உள்ளூர்ச் சந்தையில் தேங்காயின் விலை, என்றுமில்லாத வகையில் அதிகரித்துள்ளது. தற்போதைய நிலையில் தேங்காய் ஒன்றின் விலை, 90 ரூபாய் வரையிலும் அதிகரித்துள்ளது.

எனினும், ஹெக்டர்கொப்பேகடுவ விவசாயம் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் விடுத்துள்ள புள்ளிவிவரத்தின் பிரகாரம், பெரிய தேங்காய் ஒன்றின் விலை 60 ரூபாய் முதல் 80 ரூபாய் வரையிலும் அதிகரித்துள்ளது. சிறிய தேங்காய் ஒன்றின் சில்லறை விலை, 55 ரூபாயாகும். தகவல் தெரிவிக்கின்றது.

எவ்வாறாயினும், தமிழ் -சிங்களப் புத்தாண்டுக் காலத்தில், தேங்காய் ஒன்றின் விலை 100 ரூபாய் வரையிலும் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தேங்காய் சந்தை தகவல் தெரிவிக்கின்றது.

எனினும், தேங்காய் விலை அதிகரித்துகொண்டே செல்வது தொடர்பில் அரச அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்று தாம் எதிர்பார்ப்பதாக, சில்லறை வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Posts