தெ. ஆபிரிக்கா முதலில் துடுப்பாட்டம்

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது.

தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை அணி மூன்று டெஸ்ட் போட்டிகள், மூன்று இருபதுக்கு 20 போட்டிகள் மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடுகின்றது.

இதற்கமைய இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி போட் எலிசபெத்திலுள்ள செயின்ட் ஜோர்ச் பார்க் மைதானத்தில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது.

இதன்படி 14 ஓவர்கள் நிறைவில் தென்னாபிரிக்க அணி 40 ஒட்டங்களைப்பெற்றுள்ளது.

Related Posts