எதிர்வரும் 2017ஆம் ஆண்டு தேசிய புத்தாண்டுக்கு முன்னர் தெஹிவளை தேசிய விலங்கியல் பூங்காவை இரவுப் பூங்காவாக மாற்றுவதற்கான திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாக நிலையான அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா தெரிவித்துள்ளார்.
மிருகங்களை கூடுகளில் அடைத்து வைக்காது, அவை சுதந்திரமாக நடமாடும் வகையில் இந்த விலங்கியல் பூங்கா மூன்று கட்டங்களாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியாலாளர்கள் சந்திப்பின்போதே, அவர் இதனைக் கூறினார்.
இந்த விலங்கியல் பூங்கா சுமார் 100 வருடங்கள் பழமை வாய்ந்தது ஆகும் எனவும் அவர் கூறினார்.