தெஹிவளையில் இருவர் சடலமாக மீட்பு

தெஹிவளை – படோவிட பகுதி கால்வாயில் இருந்து இரண்டு சடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

119 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எதுஎவ்வாறு இருப்பினும், உயிரிழந்தவர்கள் யார் என்ற விபரம் இதுவரை தெரியவரவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts