யாழ். தெல்லிப்பழையில் மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தில் இடம்பெற்ற குழப்பத்திற்கும் அரசுக்கும் தொடர்பு உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
அத்துடன், அவ்வாறு அரசுக்குத் தொடர்பு இல்லையென்றால், விசாரணைகளை மேற்கொண்டு குறித்த நபர்களைக் கைது செய்ய வேண்டும் எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடயவியலாளர் சந்திப்பில் வைத்தே அத்தநாயக்க இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
யாழில் கடந்தவாரம் இடம்பெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் குழப்பம் ஏற்படுத்தப்பட்ட சம்பவத்திற்கும் படை புலனாய்வுப் பிரிவினருக்கும் தொடர்பு உள்ளது.
உண்ணாவிரதத்தில் குழப்பம் ஏற்படுத்திய இருவரை அங்கிருந்தவர்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். எனினும் அவர்கள் இருவரும் குறுகிய நேரத்திற்குள் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அவ்விருவரையும் விடுதலை செய்யுமாறு யாரிடமிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இச்சம்பவத்திற்கும் அரசிற்கும் தொடர்பில்லை எனின் உடனடி விசாரணைகளை ஆரம்பித்து குழப்பத்தை ஏற்படுத்தியவர்களை கைது செய்ய வேண்டும். என்றார்.