தெல்லிப்பழை காவல்துறைப் பிரிவுக்குள் வழிப்பறி கொள்ளைகள் அதிகரிப்பு

தெல்லிப்பழை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் வழிப்பறி கொள்ளைகள் அதிகரித்துள்ளதாகவும் அதனால் தாம் அச்சத்துடனேயே வீதிகளில் செல்வதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு மாத காலப்பகுதிக்குள் குறித்த காவல்துறை பிரிவுக்குள் மாத்திரம் 15 வழிப்பறி சம்பவங்கள் இடம்பெற்று உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மல்லாகத்தை அண்மித்த பகுதியில் காங்கேசன்துறை பிரதான வீதி வழியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை பயணித்த இருவரை வீதியில் வாள்களுடன் நின்ற இருவர் வழிமறித்து வாளினை காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்து பணம் மற்றும் அலைபேசி என்பவற்றை கொள்ளையிட்டு உள்ளனர்.குறித்த சம்பவம் தொடர்பில் தெல்லிப்பளை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு உள்ளது.

அதேவேளை குறித்த காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் திருட்டு சம்பவங்களும் அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.கடந்த இரண்டு நாட்களுக்குள் மல்லாகம் அதனை அண்டிய பகுதிகளில் மூன்று திருட்டு சம்பவங்கள் இடம்பெற்று உள்ளன. எனவும் தெரிவிக்கப்படுகின்றன.

Related Posts