தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை விடுதியில் நோயாளர்களிடம் பணம் அறவீடு!

Money_cashதெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை விடுதியில் சிகிச்சை பெறும் நோயாளர்களிடம் பரிசோதனை மேற்கொள்ள பணம் கோரப்படுவதாக நோயாளர்களினால் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெல்லிப்பழையில் உள்ள ஆதார வைத்தியசாலையில் விடுதியில் தங்கி சிகிச்கை பெறும் நோயாளர்களின் இரத்தம், சலம் என்பன பரிசோதித்துப் பார்ப்பதற்கு தலா ஐம்பது ரூபா வீதம் பணம் அறவிடப்படுவதாகக் கூறப்படுகின்றது.

விடுதி நோயாளர்களிடம் காலை, மாலை என இருவேளைகளிலும் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாகவும், அதன்போது ஒவ்வொரு சோதனைகளுக்கு ஐம்பது ரூபாவை தாதியர்கள் கோருவதாகவும் நோயாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இவ் ஆதார வைத்தியசாலையை நம்பி சிகிச்சை பெறவரும் நோயாளர்களில் அதிகளவானோர் தற்போது மீள்குடியேற்றம் செய்யப்பட்டவர்கள் என்பதுடன், வறிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவ்வாறானவர்கள் அரச வைத்தியசாலையில் இலவச சிகிச்சை பெறுவோம் எனச் சென்று பரிசோதனைகள் என்ற பெயரில் பணத்தைச் செலவிட முடியாதுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

அத்துடன், பண அறவீட்டுச் செயற்பாட்டை நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கையை தொடர்புடைய திணைக்கள அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அந்த நோயாளர்கள் கோரியுள்ளனர்.

Related Posts