தெல்லிப்பழையில் சுண்ணக்கல் அகழ்வில் ஈடுபட்ட 9 பேர் கைது

arrest_1தெல்லிப்பழை கோப்பாவலி பிரதேசத்தில் சட்டவிரோதமாக சுண்ணக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த 9 பேர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து இரண்டு உழவு இயந்திரங்கள், ஒரு டிப்பர் வாகனம், 2 டொலர் வாகனங்கள், அசோக் லேலண்ட் ரக லொரி, ஒரு டாடா ரக லொரி, ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அவை மேலதிக விசாரணைகளுக்காக தெல்லிப்பழை பொலிஸார் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், நாளைய தினம் மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெல்லிப்பழை பொலிஸார் கூறினர்.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts