தெல்லிப்பளையில் வாளுடன் இளைஞன் கைது!

தெல்லிப்பளை யூனியன் கல்லூரிக்கு அருகில் கூரிய வாளுடன் நடமாடிய இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ். மாவட்ட சிறப்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) யூனியன் கல்லூரி வீதியூடாக பயணித்தபோது, அக்கல்லூரிக்கு அருகில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்றிருந்த இளைஞன் அவ்விடத்தில் இருந்து தப்பியோடியுள்ளான்.

இதனைத் தொடர்ந்து குறித்த இளைஞனை துரத்திச் சென்று சுற்றிவளைத்த குற்றத் தடுப்பு பிரிவினர், அவரை சோதனையிட்டனர். இதன்போது இளைஞனிடமிருந்து வாள் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நேற்றும் இரு இளைஞர்களை மானிப்பாய் பொலிஸார் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts