தெற்கில் வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான மருத்துவ முகாமொன்று புலம்பெயர் தமிழர் அமைப்பான உலகத் தமிழர் பேரவையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
களுத்துறை, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட மருத்துவ முகாம்களின் மூலம் சுமார் 780 பேர்வரை நன்மையடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், தென்பகுதி மக்களுக்கு உதவிகளை வழங்கிய உலகத் தமிழர் பேரவைக்கு அரசாங்கம் நன்றி பாராட்டியுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினர்களான அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, நோர்வே, அவுஸ்ரேலியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்த 17 இலங்கை வம்சாவளி வைத்தியர்களினாலேயே குறித்த சேவைகள் வழங்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, கடந்த 2ஆம் திகதி முதல் 6ஆம் திகதிவரை களுத்துறையிலும், 7ஆம் திகதி முதல் 10ஆம் திகதிவரை மாத்தறையிலும் குறித்த மருத்துவ முகாம்கள் நடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.