தெற்கில் தமிழர் தொகை அதிகரிக்கின்றது!

வடக்கில் தமிழ் மக்களின் சனப்பரம்பல் குடித்தொகை குறைந்துவருவது உண்மைதான் எனினும் தெற்கில் தமிழ்மக்களின் தொகை அதிகரித்து வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கண்டி, மாத்தளை பகுதிகளில் தமிழர்களின் சனத்தொகை அதிகரித்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

விகிதாசார தேர்தல் முறைமையின் விளைவாக வடக்கில் அதிகமான தமிழர் பிரதிநிதித்துவங்களும் தெற்கில் அதிகமான சிங்கள பிரதிநிதித்துவங்களும் உருவாகின எனவே சுமூகமான அரசியல் சூழல் ஒன்றை உருவாக்க வேண்டிய தேவையும் உருவாகி உள்ளது என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பிலுள்ள பம்பலப்பிட்டி விடுதியொன்றில் ஹாட்லிக் கல்லூரி பழைய மாணவர் சங்க ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Related Posts