தெற்காசிய போட்டிகளில் புதிய சாதனை படைத்த இலங்கை வீரர்

இந்தியாவில் நடைபெற்று வரும் 12 வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் முதலாவது தங்கப் பதக்கத்தை இலங்கை வென்றுள்ளது.

mathuse-abaya-singa

ஆண்களுக்கான 200 மீற்றர் தூர நீச்சல் போட்டியில் (freestyle swimming)முதலாமிடத்தைப் பெற்ற மெத்தியுவ் அபேசிங்க இந்தப் பதக்கத்தை வென்றுள்ளார்.

குறித்த தூரத்தை அவர் 1 நிமிடமும் 59.28 செக்கன்களில் கடந்துள்ளார்.

இதன் மூலம் மூலம் தெற்காசிய போட்டியில் இலங்கை வீரர் மெத்தியுவ் அபேசிங்க புதிய சாதனை படைத்துள்ளார்.

12 வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிக நேற்று இந்தியாவின் குவாஹாட்டியில் இந்திரா காந்தி மைதானத்தில் நேற்று ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

8 நாடுகளை சேர்ந்த 2500 வீரர், வீராங்கனைகள் இம்முறை இந்தப் போட்டியில் கலந்து கொள்ளும் அதேவேளை இந்தியாவில் இருந்து அதிக போட்டியாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.

முன்னதாக இடம்பெற்ற மகளிருக்கான 48 கிலோகிராம் எடையுடைய பளுதூக்கும் போட்டியில் முதலாவது வெள்ளிப் பதக்கத்தை இலங்கை சார்பாக தினூஷா ஹன்சனி என்ற வீராங்கனை வென்றுள்ளார்.

இதேவேளை ஆண்களுக்கான 100 மீற்றர் தூர பட்டம்பூச்சி முறை நீச்சல் (butterfly swimming) போட்டியில் முதலாமிடத்தைப் பெற்று மெத்தியுவ் அபேசிங்க இரண்டாவது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

குறித்த தூரத்தை அவர் 55.42 செக்கன்களில் கடந்துள்ளார்.

Related Posts