தெறி’ – மில்லியன் டாலர் ‘பேபி’

‘தெறி’ படத்திற்கு விமர்சனங்கள் அப்படி, இப்படி என இருந்தாலும் வசூலைப் பொறுத்தவரையில் விஜய்யின் முந்தைய சூப்பர் ஹிட் படங்களான ‘துப்பாக்கி, கத்தி’ ஆகிய படங்களை விட வசூல் நன்றாக இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

vijay-baby

தமிழ்நாட்டில் மட்டுமல்லாது உலகம் முழுவதுமே இப்படத்திற்கு ஒரே மாதிரியான வரவேற்பு இருப்பது ஆச்சரியமாக உள்ளது என்கிறார்கள். அந்த வரவேற்பே இந்தப் படம் விமர்சனங்களையும் மீறி வசூலைக் குவிக்கக் காரணமாக அமைந்துள்ளது என்கிறார்கள்.

முன்பெல்லாம் எப்எம்ஸ் என்பது மலேசியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய தமிழர்கள் அதிகமாக வசிக்கும் நாடுகளில் மட்டுமே வசூலைக் கொடுக்கும் படங்களாக இருந்தன. தற்போது அவற்றை விட அமெரிக்காவில் ஒரு தமிழ்ப் படத்திற்கு ஆகும் வசூல் அதிகமாக இருக்கிறது.

கடந்த வாரம் வெளியான ‘தெறி’ படம் அமெரிக்காவில் ஒரு மில்லியன் டாலர் வசூலைக் கடந்து ‘மில்லியன் டாலர் பேபி’ ஆக மாறியுள்ளது. “எந்திரன், விஸ்வரூபம், ஐ, லிங்கா ” படங்களுக்குப் பிறகு 1 மில்லியன் டாலர் வசூலைக் கடந்த படமாக ‘தெறி’ படம் தற்போது அமைந்துள்ளது.

‘தெறி’ படம் அமெரிக்காவில் 1 மில்லியன் டாலர் வசூலைக் கடந்ததை அந்தப் படத்தை அமெரிக்காவில் வெளியிட்ட சினி கேலக்சி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Related Posts