கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில், விஜய் நடித்துள்ள ‘தெறி’ படம் அடுத்த மாதம் 14-ஆம் தேதி உலகம் முழுக்க ரிலீசாகவிருக்கிறது.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸர், பாடல்கள், டிரைலருக்கு விஜய்யின் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் தெறி படம் குறித்து சில புதிய தகவல்களும் வெளியாகி உள்ளன.
‘தெறி’ படத்தில் விஜய் மூன்று மாறுபட்ட கெட்டப்களில் தோன்றுகிறார். ஆனால் மூன்று கேரக்டர்கள் அல்ல, மூன்று கெட்டப்களில் தோன்றினாலும் ஒரே ஆள்தான்.
அந்த கேரக்டர் பெயர் ஜோசஃப் குருவிளா! கேரளாவில் இந்தப்பெயர் செம பாப்புலர். தமிழகத்துக்கு அடுத்த படியாக விஜய்க்கு அதிக ரசிகர்கள் இருப்பது கேரள மாநிலத்தில்தான். அதை மனதில் வைத்து விஜய் ஏற்றுள்ள ஜோசஃப் குருவிளா கேரக்டரை கேரளாவைச் சேர்ந்தவர் என்று சித்தரித்திருக்கிறாராம் அட்லி. அதுமட்டுமல்ல, இப்படத்தில் நிறைய மலையாள வசனங்கள் இடம் பெற்றுள்ளன என்றும் சொல்லப்படுகிறது.
ஜோசஃப் குருவிளா என்ற பெயரில் நடிக்கும் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் கேரளாவிலுள்ள கோட்டயம் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளன.
இந்த எபிசோடில் விஜய்யுடன் மோதும் வில்லனாக கேரளாவை சேர்ந்த நடிகர் பினீஷ் பாஸ்டின் நடித்துள்ளார். நிவின் பாலி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ‘ஆக்ஷன் ஹீரோ பிஜு’ படத்தில் வில்லனாக நடித்தவர் பினீஷ். இவரது வித்தியாசமான கெட்-அப்பை பார்த்த பிறகுதான் அட்லி இவரை ‘தெறி’ படத்தில் வில்லனாக்கியுள்ளார். பினீஷ் பாஸ்டின் நிஜத்தில் விஜய்யின் தீவிர ரசிகராம்!