தெறி படத்திற்காக விஜய் எடுத்த ரிஸ்க்

விஜய் தற்போது அட்லி இயக்கும் ‘தெறி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் நடித்து வருகிறார்கள். இதில் விஜய் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். பொங்கல் தினத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்படத்தின் புகைப்படங்கள் மட்டுமே வெளியாகி இருக்கிறது. இது ரசிகர்களை நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

தற்போது இப்படத்தின் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இதில் 100 அடி உயரத்தில் இருந்து தண்ணீருக்குள் குதிப்பது போல் ஒரு காட்சி படமாக்க திட்டமிட்டிருந்தார்களாம். டூப் எல்லாம் ஏற்பாடு செய்த பின், விஜய் டூப் போட மறுத்து விட்டாராம். காட்சி தத்ரூபமாக வரவேண்டும் என்பதற்காக நானே குத்திக்கிறேன் என்று கூறி விஜய்யே இதில் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார்.

இதுகுறித்து அட்லி கூறும்போது, ‘விஜய் சண்டைகாட்சியில் ரிஸ்க் எடுத்து நடித்தது எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. நிறைய போலீஸ் படங்களை வெளிவந்திருக்கிறது. ஆனால் இந்த படம் முற்றிலும் மாறுபட்ட படமாக இருக்கும். இப்படத்திற்காக விஜய் கடின உழைப்பை கொடுத்து வருகிறார். என்னுடைய முதல் படமான ராஜா ராணியில் நயன்தாரா, நஸ்ரியாவுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை போலவே இப்படத்திலும் சமந்தா, எமி ஜாக்சன் இருவருக்கும் முக்கியத்துவம் அளித்திருக்கிறேன். இதுவரை பார்த்திராத புது வில்லனாக மகேந்திரனை பார்க்கலாம்’ என்றார்.

Related Posts