தெறி தீம் மியூசிக்கை வெறித்தனமாக உருவாக்கும் ஜி.வி.பிரகாஷ்

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘தெறி’. விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தின் டீசர் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ‘தெறி’ படத்தை பற்றிய தகவலை வெளியிட்டுள்ளார்.

“தெறி படத்தின் பாடல்கள் அனைத்தும் முடிந்து விட்டன. படத்தின் தீம் மியூசிக்கை தற்போது தீவிரமாக உருவாக்கிக் கொண்டிருக்கிறேன். விரைவில் படத்தின் ஆடியோ மற்றும் டீசர் வெளியாகும்” என்று கூறியிருக்கிறார். இது விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

‘தெறி’ படத்தில் விஜய்யுடன் சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும் இதில் மீனாவின் மகள் நைனிகா குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறார். கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தை தயாரித்து வருகிறார். தமிழ்ப்புத்தாண்டில் இப்படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts