தெறி டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு

விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘தெறி’. விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இப்படத்தில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். கடந்த பொங்கல் தினத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்படத்தின் புகைப்படங்கள் மட்டுமே வெளியானது.

தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகும் தேதியை அறிவித்திருக்கின்றனர். குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 26ம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். 50 வினாடிகள் கொண்ட இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விஜய் நடிப்பில் இதுவரை வெளியான டீசர்களின் சாதனையை தெறி டீசர் முறியடிக்கும் என்ற எதிர்ப்பார்ப்பும் நிலவுகிறது.

தெறி படத்தில் விஜய்யுடன் சமந்தா, எமிஜாக்சன் ஆகியோர் நடித்துள்ளனர். அட்லி இயக்கியுள்ள இப்படத்தை தாணு தயாரித்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.

Related Posts