தெறி டீசரை நீக்கி அதிர்ச்சி தந்த youtube! : ஆபாசமாக திட்டிய விஜய் ரசிகர்கள்!!

காப்புரிமை பிரச்சினை காரணமாக விஜய்யின் தெறி டீசரை, வெளியான 12 மணி நேரத்துக்குள் நீக்கி, ரசிகர்களுக்கு அதிர்ச்சி தந்துள்ளது யு ட்யூப்.

youtube-gave-shock-to-vijay-fans-by-removing-theri-

அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன், பிரபு, இயக்குநர் மகேந்திரன், ராதிகா போன்றோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தெறி. இந்தப் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இது அவருடைய 50-வது படம்.

தெறி படத்தின் டீசர் நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்டது. விஜய் ரசிகர்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் டீசரைப் பகிர்ந்து கொண்டாடினார்கள்.

இந்நிலையில் திடீரென நேற்று காலை தெறி படத்தின் டீசரை யூடியூப் இணையத்தளம் நீக்கியது. காப்புரிமை தொடர்பாக எழுந்த சந்தேகத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

‘Theri – Official Teaser is no longer available due to a copyright claim by TamilTalkies’ என்று யூடியூப் இதற்கு விளக்கம் அளித்திருந்தது.

அதாவது தெறி பட டீசருக்கு தமிழ் டாக்கீஸ் என்ற நிறுவனம் காப்பிரைட் பிரச்சினை எழுப்பியதால் டீசரை நிறுத்தியதாக யுட்யூப் தெரிவித்திருந்தது.

இதனால் விஜய் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தார்கள். யூடியூப் இணையத்தளத்துக்குத் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்தார்கள்.

இந்நிலையில், சில நிமிட இடைவெளிக்குப் பிறகு தெறி டீசரை மீண்டும் பதிவேற்றியது யுட்யூப்.ஆனால் இந்த இடைப்பட்ட நேரத்தில் யுட்யூபுக்கு வந்த விஜய் ரசிகர்களின் கண்டனக் கடிதங்கள் சிலவற்றில் அச்சிலேற்ற முடியாத அளவுக்கு ஆபாசம் தெறித்ததாம்!

Related Posts