தெறி கிளைமாக்ஸ் காட்சிக்காக விஜய் எடுத்த ரிஸ்க்

விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் ‘தெறி’ படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் நடித்து வருகிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

தற்போது இப்படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியின் படப்பிடிப்பு சென்னை ஒமேகா தொழிற்சாலையில் நடைபெற்று வருகிறது.

இதில் விஜய்யுடன் 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சண்டை கலைஞர்கள் பங்கேற்று வருகின்றனர். இந்த சண்டைக் காட்சியில் விஜய் கிரேனில் தொங்கியபடி சண்டை போடும் காட்சியை படமாக்கி இருக்கிறார்களாம். இந்த காட்சியை விஜய் எந்த வித தயக்கமும் இல்லாமல், டூப் போடாமல் செய்தாராம்.

இந்த சண்டைக்காட்சியை கிரேன், ஜிம்மி ஜிப்பி போன்ற கருவிகளை பயன்படுத்தி 6 கேமராக்களைக் கொண்டு பல கோணங்களில் படமாக்கி இருக்கிறார்களாம். இந்த சண்டை காட்சி படம் வெளியானதும் பெரிதளவில் பேசப்படும் என்று கூறப்படுகிறது.

Related Posts