தெறி இரண்டாம் பாகமும் வருமாம்!!

இளம் இயக்குநர்கள் செம உஷார் பார்ட்டிகளாக இருக்கிறார்கள். தன்னுடைய படம் ஓடினால்தான் அடுத்தப் படம் கிடைக்கும் என்பதை மட்டுமல்ல, தனக்குக் கிடைக்கும் வெற்றியை உடனடியாக பணம் பண்ணுவது எப்படி என்பதையும் நன்கு தெரிந்து வைத்துள்ளனர். இப்படிப்பட்ட உஷார் பார்ட்டி இயக்குநர்களின் அட்லியும் ஒருவர்.

vijay-there-2

கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன், இயக்குநர் மகேந்திரன் நடிக்கும் தெறி படத்தை இயக்கி வருகிறார் அட்லி. தெறி படத்தின் இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் டீஸர் சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டு யூ-டியூப்பில் இந்திய அளவில் மிகப்பெரும் சாதனை படைத்து வருகிறது.

ஏப்ரல் 14 ஆம் தேதி இப்படத்தை வெளியிட உள்ளனர். தெறி படத்தின் பின்னணி இசை சேர்ப்பு பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. அதற்கு முன்னதாக எடிட்டிங், டப்பிங் பணிகள் நடைபெற்றபோது தெறி படம் குறித்த ரகசியம் ஒன்று வெளியாகி உள்ளது.

அதாவது தெறி படத்தின் இரண்டாம் பாகம் வெளிவரும் என்பதை ரசிகர்களுக்கு சொல்லும் வகையில், தெறி இரண்டாம் பாகத்தில் சந்திப்போம் (Meet you in THERI 2) என்ற வாசகத்துடன் தெறி படம் முடிவடைகிறதாம்.

தெறி முதல் பாகத்தைப் போலவே, இரண்டாம் பாகத்திலும் விஜய், மீனாவின் மகள் நைனிகா, ஏமி ஜாக்சன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக நடிக்க போவதாக கதையை முடித்திருக்கிறாராம் அட்லி.

Related Posts