தெரிவுக்குழு தலைவர் பதவியிலிருந்து அரவிந்த டி சில்வா இராஜினாமா?

இலங்கை கிரிக்கட் தெரிவுக் குழுவின் தலைவர் அரவிந்த டி சில்வா தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அரவிந்த டி சில்வா தனது இராஜினாமா கடிதத்தை இலங்கை கிரிக்கட் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

எவ்வாறாயினும் அவரின் பதவி விலகலை ஏற்றுக் கொள்வதா இல்லையா என்பது தொடர்பில் இலங்கை கிரிக்கட் நிறுவனம் இதுவரை தீர்மானிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts