தென்கொரியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்களுக்கு பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொதுமன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ள கால எல்லைக்குள் இலங்கையர்கள் தென்கொரியாவை விட்டு வெளியேற வேண்டும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
இதன்படி இலங்கையர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பொதுமன்னிப்பு காலம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக் காலப்பகுதிக்குள் தென்கொரியாவில் சட்டவிரோதமான முறையில் தங்கியுள்ள இலங்கையர்களை நாடு திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.