தென்மராட்சி, வரணியில் விஷேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் இருவர் காயம்!

தென்மராட்சி, வரணி பிரதேசத்தில் விஷேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

சிவில் உடையில் வந்த விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவரும், கொட்டனால் தாக்கப்பட்டு இன்னொருவருமாக இருவர் காயமடைந்துள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கானவர் கையில் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சட்ட விரோத மதுபானம் விற்பனை செய்வதாக தெரிவித்தே தங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தாக்குதலுக்குள்ளானவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை துப்பாக்கிச் சூடு மேற்கொண்ட விசேட அதிரடி படையினரை கைது செய்த கொடிகாமம் பொலிஸார்,நேற்று சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அவர்களை சாவகச்சேரி நீதிமன்ற பதில் நீதவான் ச.இளங்கோவன் பிணையில் விடுவித்துள்ளார்.

Related Posts