தென்னிலங்கை முற்போக்கு சக்திகளோடு இணைந்து நாம் போராட வேண்டிய நேரம் இது – மாவை

mavai mp inஇராணுவ ஆக்கிரமிப்பு, மீள்குடியேற்றம் உள்ளிட்ட தமிழ் மக்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகளைத் தீர்க்க வலியுறுத்தி தென்னிலங்கை முற்போக்கு சிங்கள இயக்கங்களுடன் இணைந்து தமிழ் மக்கள் தொடர்ச்சியாகப் போராட வேண்டும்.

தொடர்ச்சியான போராட்டங்கள் மூலமே எமக்கு எதிராக தொடர்ந்து இடம்பெற்றுவரும் அநீதிகளுக்கு முடிவு கட்ட முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

இராணுவ ஆக்கிரமிப்பு, மக்களுடைய மீள்குடியேற்றம், மீனவர்களுகடைய பிரச்சினைகள் சம்மந்தமாக எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடல் நேற்று மாலை யாழ்பாடி வீடுதியில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு தெரிவித்த்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்..

தமிழ் மக்களுடைய மிக நீண்ட இனப்பிரச்சினையில் அதிகமாகப் பாதிக்கப்பட்டவர்கள் மீனவர் சமூகத்தினர்தான். விகிதாசாரத்தில் பார்த்தால் கரையோரத்தில் உள்ளவர்கள் இந்தப் பிரச்சினைகள் காரணமாக அதிகமாக உயிரிழந்தும் உள்ளனர்.

இனப்பிரச்சினை காரணமாக வடபுல மீனவர்கள் பெரும் பிரச்சினைகளை ஏதிர் கொண்டு வருகின்றார்கள். யுத்த காலத்திலும் சரி தற்போதும் சரி எங்களுடைய மீனவர்கள் எதே ஒரு விதத்தில் பிரச்சினைகளை எதிர்கொள்ளுகின்றார்கள் என அவர் கூறினார்.

தற்போதைய பெரும் பிரச்சினை இந்திய மீனவர்களுடைய அத்துமீறல்களே. கடந்த 5 ஆண்டுகளில் இந்திய மீனவர்களுடைய அத்துமீறல்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன. வெறுமனே கைதுகளும் விடுதலைகளும் மட்டும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வாகாது. நிரந்தரமாக தீர்வு காணப்பட வேண்டும். தற்போது இந்தியாவில் ஆட்சி மாறம் ஏற்பட்டுள்ளது. அந்த ஆட்சி மாற்றமானது சிலவேளைகளில் தமிழ் மக்களுக்கு பயனுடையதாக இருக்கலாம். தற்போது ஆட்சியில் வந்துள்ள அரசாங்கத்துடன் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அன்றாட பிரச்சினைகள் தொடர்பாக தீவிரமாக பேச உள்ளோம். மீனவர்களுடைய பிரச்சினைகள் தொடர்பாகவும் பேசுவோம் எனவும் மாவை சேனாதிராஜா மேலும் தெரிவித்தார்.

Related Posts