தென்னிலங்கை மீனவர்களால் காரைநகர் மீனவர்கள் பாதிப்பு

யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் தென்னிலங்கை மீனவர்கள், அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

“காரைநகர் கடற்பரப்பில் கடந்த சில வாரங்களாக நீர்கொழும்பு, புத்தளம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், இழுவைப் படகுகளில் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். காரைநகர் பகுதியில் உள்ள கடற்படையின் பாவனையில் உள்ள இறங்குதுறையையே அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்” என, அப்பகுதி மீனவர்கள் கூறுகின்றனர்.

அத்துடன் தென்னிலங்கை மீனவர்கள், அப்பகுதியில் இழுவை படகுகளில் தொழில் செய்வதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் உரிய தரப்பினருக்கு அறிவித்தும் எந்த வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை” என மீனவர்கள் குறிப்பிட்டனர்.

Related Posts