இலங்கையில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக தென் பகுதியை ஆட்டிப்படைக்கும் வைரஸ் தொற்று நாடு மூடுவதும் பரவும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வைரஸ் தொற்றால் இதுவரை 600ற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சிறுவர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் முன் பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இன்புளுவென்சா வைரஸ் தொற்று காரணமாகவே குறித்த நோய் பரவி வருகின்றதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தென் மாகாணத்தில் கம்புறுப்பிட்டி, மாத்தறை மற்றும் கராப்பிட்டிய பகுதிகளில் கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இது தொடர்பிலான முழு அறிக்கையினை விரைவில் கொழும்பு ஆராய்ச்சி நிலையம் வெளியிடுமென குறிப்பிடப்படுகிறது
அதுமட்டுமன்றி தற்போது பல மருத்துவமனைகளில் சிகிச்சைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலதிக வசதிகளை வழங்குமாறும் சுகாதார அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த வைரஸ் தொற்றுக்கான காரணிகளை விரைவில் அறிந்து அதற்கான சிகிச்சைகளை வழங்குவதன் மூலமே நாடுமுழுவதும் வைரஸ் பரவாமல் தடுக்க முடியும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவற்றை தடுக்கத் தவறினால், தற்போது பெய்து வரும் கடும் மழையால் நாடு முழுவதும் உள்ள மக்கள் இந்த தொற்றுக்குள்ளாகக் கூடிய அபாயம் காணப்படுவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.