தென்னிந்திய சினிமாவில் புதிய சாதனையை படைத்த `விவேகம்’ டீசர்

தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் `விவேகம்’ படத்தின் டீசரால், சமூக வலைதளங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஆரம்பித்த கிடுகிடுப்பு இன்னமும் அடங்கவில்லை.

எங்கு சென்றாலும் `விவேகம்’ என நகரின் சூடான தலைப்பாக மக்களால் பேசப்பட்டு வருகிறது. டீசரைப் பார்த்தவர்கள் அதை திரும்ப திரும்ப பலமுறை விரும்பி பார்க்கும் அளவுக்கு தல புயல் கடுமையாக வீசியுள்ளது என்று கூட சொல்லலாம்.

நேற்று முன்தினம் நள்ளிரவு வெளியாகிய இந்த புயல் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. `விவேகம்’ டீசர் வெளியாகி தற்போது வரை 50 லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ளது. இதில் யூடியூப்பில் மட்டும் 38 லட்சத்திற்கும் மேற்பட்டோர் `விவேகம்’ டீசரை பார்த்து ரசித்திருக்கின்றனர்.

Related Posts