தென்னாபிரிக்க அணி ஒரு இன்னிங்சினாலும் 118 ஓட்டங்களாலும் வெற்றி

தென்ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி ஒரு இன்னிங்சினாலும் 118 ஓட்டங்களாலும் வெற்றிபெற்றுள்ளது

பொலோ ஒன் முறையில் தனது இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கட்டுகளையும் இழந்து 177 ஓட்டங்களை பெற்றது.

முதல் இன்னிங்சில் 131 ஓட்டங்களைப் பெற்ற இலங்கை அணி அனைத்து விக்கட்டுக்களையும் இழந்துள்ளது.

இலங்கை அணி சார்பாக குசல் மெண்டிஸ் 41 ஓட்டங்களைப் பெற்றார்.

முன்னதாக துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி முதல் இன்னிங்சில் 426 ஓட்டங்களைப் பெற்றது.

அணி சார்பாக ஹசிம் அம்லா 134 ஓட்டங்களையும், ஜே.பி.டுமினி 155 ஓட்டங்களையும் பெற்றனர்.

ஆட்டத்தின் சிறப்பாட்டக்காரராக டுமினி (தென் ஆப்ரிக்கா) தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு தொடரின் சிறப்பாட்டக்காரராக டி எல்கர் (தென் ஆப்ரிக்கா)ம் தெரிவு செய்யப்பட்டனர்

Related Posts