தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டிகளில் இருந்து மாலிங்க விலக்கப்பட்டுள்ளார்!

தென்னாபிரிக்க அணிக்கெதிராக இடம்பெறவூள்ள ஒருநாள் மற்றும் இருபது-20 போட்டிகளில் விளையாடுவர் என எதிர்பார்க்கப்பட்ட லசித் மலிங்க குறித்த தொடரில் இருந்து விலக்கப்பட்டுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற பயிற்சியின் போது முழங்கால்களில் வலியை உணருவதாக மலிங்க முறையிட்டதன் காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் அடுத்த மாதம் அவுஸ்திரேலிய அணிக்கெதிராக இடம்பெறவுள்ள மூன்று இருபது-20 போட்டிகளில் அவர் விளையாட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழங்கால்களில் ஏற்பட்டுள்ள உபாதைக்காரணமாக மலிங்க சுமார் ஒருவருட காலமாக அணியில் இணைத்துக்கொள்ளப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts