Ad Widget

தெண்டுல்கரின் சாதனையை முறியடித்த யூனிஸ்கான்

வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் நேற்று தொடங்கியது. டெங்கு காய்ச்சல் பாதிப்பில் இருந்து மீண்டு வந்த பாகிஸ்தான் மூத்த வீரர் யூனிஸ்கான் அணிக்கு திரும்பினார்.

younis-khan

‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த பாகிஸ்தானுக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. அசார் அலி ரன் ஏதுமின்றியும், சமி அஸ்லாம் 6 ரன்னிலும் வெளியேற்றப்பட்டனர். ஆனால் அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று விளையாடி அணியை காப்பாற்றினர். ஆசாத் ஷபிக் 68 ரன்களில் போல்டு ஆனார்.

4-வது வரிசையில் களம் கண்ட 38 வயதான யூனிஸ்கான் நேர்த்தியாக ஆடினார். 83 ரன்களில் இருந்த போது கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பித்த அவர் தனது 33-வது சதத்தை எட்டினார். அவர் 35 வயதுக்கு பிறகு மட்டும் 13 சதங்களை எடுத்துள்ளார். இது ஒரு சாதனையாகும். இதற்கு முன்பு சச்சின் தெண்டுல்கர் (இந்தியா), கிரஹாம் கூச் (இங்கிலாந்து), ராகுல் டிராவிட் (இந்தியா) ஆகியோர் 35 வயதுக்கு பிறகு 12 சதங்களை அடித்ததே அதிகபட்சமாக இருந்தது. அதை யூனிஸ்கான் முறியடித்தார்.

யூனிஸ்கான் 127 ரன்கள் (205 பந்து, 10 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்த நிலையில் அவுட் ஆனார். போதிய வெளிச்சம் இல்லாததால் 6 ஓவர் முன்கூட்டியே முடிக்கப்பட்ட ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 304 ரன்கள் சேகரித்துள்ளது. 54 ரன்களில் எளிதான கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பி பிழைத்த கேப்டன் மிஸ்பா உல்-ஹக் 90 ரன்களுடன் களத்தில் இருக்கிறார். 2-வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.

Related Posts