தூய அரசியலுக்கான சபதம் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது: அங்கஜன்

தூய அரசியலுக்கான ஆரோக்கியமான சந்ததியினரின் சபதம் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான சுதந்திர கட்சியின் கை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி மாபெரும் பரப்புரை பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

கரவெட்டி பிரதேச சபைக்கான இறுதி மாபெரும் பரப்புரை பிரசார கூட்டம் மக்களின் பேராதரவுடன் வெற்றி முழக்கத்துடன் நிறைவு பெற்றிருந்தது.

இதன்போது, மாற்றத்திற்கான பேராதரவிற்கு மத்தியில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts