துவிச்சக்கரவண்டிக்கு மின் விளக்கு அவசியம்:- பிரதிப் பொலிஸ்மா அதிபர்

Cycleயாழ். மாவட்டத்தில் துவிச்சக்கர வண்டிகளுக்கு மின் விளக்குகள் பொருத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளதாக யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்து கருணாரட்ண தெரிவித்தார்.

அதன் பிரகாரம் யாழ். பிரதான வீதிகளில் செல்லும் துவிச்சக்கரவண்டிகள் பொலிஸாரினால் பரிசீலனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதற்கமைவாக மின்விளக்குகள் மற்றும் பிரேக் பூட்டப்படாத துவிச்சக்கர வண்டிகளை செலுத்தும் ஓட்டுனர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுகப்படுமென யாழ்.போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு மின்விளக்குகள் பொருத்தாமலும் பிரேக் இல்லாத நிலையிலும் துவிச்சக்கர வண்டிகளை செலுத்தும் ஓட்டுனர்களின் அடையாள அட்டை கைப்பற்றப்படுவதுடன், ஓட்டுனர்கள் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படுவர் என யாழ். போக்குவரத்துப் பொலிஸார் மேலும் கூறினர்.

Related Posts