துரோக கூட்டமைப்பை மக்கள் தூக்கியெறிய வேண்டும் : சட்டத்தரணி சுகாஸ்

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் துரோக கூட்டமைப்பை மக்கள் தூக்கியெறிய வேண்டும் என தெரிவித்துள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரான சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஸ், தமிழ்தேசம் பாதுகாக்கப்பட தமிழ்தேசிய மக்கள் முன்னணிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

சைக்கிள் சின்னத்தில் போட்டயிடுகின்ற தமிழ்த்தேசிய பேரவையின் தேர்தல் பிரச்சார கூட்டம் நாச்சிமார் கோவிலடியில் நடைபெற்றது. இதில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

எமது மக்கள் இன்றைய அரசியல் தலைமைகளால் ஏமாற்றப்படும் நிலையில் தமிழினத்தினை காப்பாற்ற கஜேந்திரகுமார் தனிவழியில் செல்கின்றார். இந்த பயணத்தில் எந்த தடைகள் வருகின்ற போதிலும் நாங்கள் பின்னிற்க போவதில்லை.

தற்போது உள்ள தமிழ் தலைவர்கள் எம்மை முள்ளிவாய்காலில் தலைவர் ஆண்ட மண்ணில் சிங்கள பொலிசாரை கொண்டு எமது மக்களை பரிசோதிக்கவும் வந்து விட்டார்கள். இது புலிகளின் கூட்டமைப்பல்ல
சிங்கள பேரினவாதிகளின் கூட்டமைப்பு,

எதிர்வரும் தேர்தலில் இந்த துரோக கூட்டமைப்பை மக்கள் தூக்கியெறிய வேண்டும். மாற்றம் தமிழ் உணர்விலிருந்து வரவேண்டும். மாற்றத்திற்கான பயணத்தை 2010 இல் இருந்து ஆரம்பித்தோம் அந்த பயணம் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும் வரை தொடரும்.

எதிர்வரும் தேர்தலில் தூய தமிழத்தேசிய அரசியலுக்கு நாங்கள் தயார், நீங்கள் சந்தர்ப்பம் தாருங்கள். ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் எம்மிடம் பலம் இல்லை. இன்னுமொரு முள்ளிவாய்க்கால் தான் இந்த இடைக்கால அறிக்கை,

ஆகையால் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். நாங்கள் சொன்னதை செய்யாவிட்டால் அடுத்த தேர்தலில் எம்மை நிராகரியுங்கள், நாங்கள் பதவிக்காக அரசியல் செய்யவில்லை எமது மாவீரர்களுக்கு எமது மக்களுக்கு கூட்டமைப்பு துரோகம் செய்கின்றது. அதனை உணர்ந்து ஒவ்வொரு வாக்காளனும் செயற்பட வேண்டும் என்றார்.

Related Posts