துரையப்பா விளையாட்டரங்கத்தை மோடி திறந்துவைப்பார்

மீளவும் செப்பனிடப்பட்ட யாழ். துரையப்பா விளையாட்டரங்கத்தை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜானதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து திறந்துவைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ வசதியுடனேயே அவர், இந்த வைபவத்தில் பிரதமர் நரேந்திர மோடி இணைந்துகொண்டு திறந்துவைக்கவுள்ளார். இந்த வைபவம் எதிர்வரும் 18ஆம் திகதியன்று இடம்பெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வைபவத்தில் பிரதம அதிதிகளாக பங்கேற்கும் இந்தியப்பிரதமர் நரேந்திரமோடி இந்தியாவிலிருந்தும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, யாழ்ப்பாணத்திலிருந்து உரையாற்றுவர்.

Related Posts