துரையப்பா மைதான புனரமைப்பு பணிகளை பார்வையிட்டார் மூர்த்தி

இந்திய அரசாங்கத்தின் 145 மில்லியன் ரூபாய் நிதியுதவியில் புனரமைப்பு செய்யப்படும் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கின் புனர்நிர்மாணப் பணிகளை யாழ் – இந்திய துணைத்தூதரக தற்காலிக கொன்சலேட் ஜெனரல் எஸ்.டி.மூர்த்தி, புதன்கிழமை (10) நேரில் சென்று பார்வையிட்டார்.

மைதானத்துக்கான சுற்றுமதில் அமைத்தல், 400 மீற்றர் ஓட்டப்பாதை அமைத்தல், நுழைவாயில்கள் புனரமைப்பு, மலசலகூட கட்டிடத்தொகுதி அமைத்தல், குடிநீர் வசதிகள் ஏற்படுத்தல், கழிவகற்றல் வேலைகள், புற்தரைக்கு நீர்தெளிக்கும் கருவிகள் பொருத்துதல், மின்விளக்கு வசதிகள் ஏற்படுத்தல், பார்வையாளர் அரங்குக்கான கூரைகள் புனரமைத்தல் உள்ளிட்ட பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நவம்பர் மாதம் 6ஆம் திகதி ஆரம்பமாகிய புனரமைப்பு பணிகள் எதிர்வரும் 2015ஆம் ஆண்டு மே மாதத்துக்கு முன்னராக முடிவடைந்து, விளையாட்டு வீரர்களின் பாவனைக்கு விடப்படும் என மூர்த்தி தெரிவித்தார்.

Related Posts