விண்ணப்பித்து மூன்று நாட்களில் தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளும் புதிய நடைமுறை ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.
இதில் சரியான முறையில் ஆவணங்களை அனுப்பி வைக்கும் விண்ணப்பதாரிகளுக்கு மட்டுமே இவ்வாறு துரித கதியில் அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.
அடையாள அட்டைக்காக விண்ணப்பம் செய்து அடையாள அட்டை கிடைக்காதவர்கள் ஆட்பதிவு திணைக்களத்தின் 011-2555616 மற்றும் 011-2506458 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு விபரங்களை அறிந்துகொள்ள முடியும்.
இதேவேளை விரைவில் இலத்திரனியல் அடையாள அட்டைகள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.