துப்பாக்கி கலாச்சாரத்தை தடுக்க முடியவில்லை – ஒபாமா

அமெரிக்காவில் துப்பாக்கியால் சுட்டுக்கொள்வதை தடுக்கும் முயற்சி தோல்வியில் முடிந்ததாக அந்நாட்டு அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.

Obama

அமெரிக்காவில் துப்பாக்கிக் கலாச்சாரம் அதிகமாக உள்ளது. சிறுவர்கள் உட்பட பலரும் துப்பாக்கியால் சுட்டுக் கொள்வது அதிகரித்து வருகிறது.

அமெரிக்காவில் ஆண்டுக்கு 45 லட்சம் துப்பாக்கிகள் விற்பனையாகிறது. அங்கு ஒவ்வொரு ஆண்டும் 30 ஆயிரம் பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்படுகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு அமெரிக்காவின் துப்பாக்கிக் கலாச்சாரத்தை ஒழிக்க அமெரிக்க அதிபர் ஒபாமா உத்தரவிட்டார். ஆனால் அங்கு துப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிக்க முடியவில்லை என்று தற்போது அவர் கூறியுள்ளார்.

இது பற்றி செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “உலகில் வளர்ந்த நாடாக அமெரிக்கா உள்ளது. ஆனால், இங்குதான் துப்பாக்கிச் சூடு அதிகமாக நடக்கிறது.

கடந்த 2012 ஆம் ஆண்டு நியூடவுன் நகரில் உள்ள பள்ளிக்கூடத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு என்னை கடும் அதிர்ச்சி அடைய செய்தது. அந்த துப்பாக்கிச் சூட்டால் நான் மனமுடைந்து போனேன்.

இதை தொடர்ந்து அமெரிக்க மக்களிடம் தேவையின்றி இருக்கும் துப்பாக்கிகளை, ஒப்படைக்க கோரி நடவடிக்கை எடுத்தேன். ஆனால் இந்த துப்பாக்கிக் கலாச்சாரம் குறையவில்லை. துப்பாக்கியால் சுடுவதை தடுக்கும் எனது முயற்சி தோல்வி அடைந்து விட்டதை ஒப்புக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு நியூடவுன் நகரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்துக்குள் புகுந்த ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் 20 மாணவர்கள் மற்றுத் 6 ஆசிரியர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts