வவுனியா, நெடுங்கேணி பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரிடம் இருந்து ரி-56 ரக துப்பாக்கியும், 611 ரவைகளும் கைப்பற்றப்பட்டதாக நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (வெள்ளிக்கிழமை) இரவுவேளை வீதிக் கடமையில் நின்ற போக்குவரத்து பொலிஸார் அவ்வீதியால் வந்த மோட்டர் சைக்கிளில் சென்றவரை மறித்துச் சோதனையிட்டபோதே குறித்த ஆயுதம் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த மோட்டர் சைக்கிளை செலுத்தி வந்த வவுனியா, குளவிசுட்டான் பகுதியைச் சேர்ந்த சிவசம்பு ஜெயரதன் (45 வயது) என்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும் அவரது வீட்டிலும் சோதனை மேற்கொண்டதாக தெரிவித்துள்ள பொலிசார் குறித்த நபரை வவுனியா நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.