துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனுடன் தொடர்புடையதாக இருவர் கைது!

மானிப்பாயில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில், இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்களே பொலிஸாரால் இன்று (புதன்கிழமை) கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடம் பல்வேறு விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த சனிக்கிழமை மானிப்பாய் சுதுமலைப் பகுதியில் வாள்வெட்டுக் குழுவினர் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டுப் பிரயோகத்தில் கொடிகாமம், கச்சாய் பகுதியைச் சேர்ந்த செ.கவிகஜன் (வயது-23) என்பவர் உயிரிழந்தார்.

இச்சம்பவத்தின் பின்னர், சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னரே, இன்று குறித்த இரு இளைஞர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதன் பின்னர், இரு இளைஞர்களையும் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related Posts