யாழில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவனின் சார்பில் அவரது தாயாருக்கு வீடொன்று கையளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே உறுதியளிக்கப்பட்டதற்கு அமைய மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, இந்து மத விவகாரம் மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சர் சுவாமிநாதனால் இன்று (புதன்கிழமை) குறித்த வீடு கையளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் 20ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழந்த நிலையில், குறித்த இருவரது குடும்பத்தாருக்கும் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் அமைச்சு உறுதியளித்திருந்தது.
அதற்கமைய முதற்கட்டமாக கிளிநொச்சியில் வசிக்கும் நடராஜா கஜனின் தாயாருக்கு இன்று வீடு கையளிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் உயிரிழப்பு அவர்களது குடும்பத்தினருக்கு பேரிழப்பாக விளங்குவதால், இவ்வுதவியானது அவர்களது வாழ்க்கையை சீரமைத்துக் கொள்ள வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சின் 13 இலட்சத்து 43 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இராணுவத்தின் உதவியுடன் இவ்வீடு நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.