வடமராட்சி கிழக்கில் அண்மையில் பொலிஸாரின் துப்பாச்சிச்சூட்டில் இளைஞன் உயிரிழந்த சம்பவத்தினை அடுத்து இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் இன்று (வெள்ளிக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலைவேளை துன்னாலைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பருத்தித்துறைப் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசிய தவலையடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.