தீவுப் பாடசாலை மாணவர்களுக்கு உதைபந்தாட்ட பயிற்சி!

இலங்கை கடற்படையின் வடக்கு கடற்படை கட்டளையகத்தினால் யாழ் குடா தீவுப் பகுதி பாடசாலை மாணவர்களுக்கு காங்கேசன்துறை பிரதேசத்தில் இரண்டாம் கட்டமாக உதைபந்தாட்ட பயிற்சியொன்று அண்மையில் (25) நடாத்தப்பட்டது.

foot-ball

இச்செயற்றிட்டம் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவிந்தர விஜேகுணவர்தனவின் வழிகாட்டலின் கீழ் ஆரம்பிக்கப்பட்டது. மேற்படி உதைபந்தாட்ட பயிற்சியின் ஒரு கட்டமாக அண்மையில் (27) மண்டை தீவில் அமைந்துள்ள வெலுசுமன கடற்படை முகாமில் நயினாதீவு மற்றும் மண்டை தீவு அணிகளுக்கிடையிலான உதைப்பந்தாட்டபோட்டி நடைபெற்றது.

மேற்படி போட்டிகளின் மூலம் தேசிய மட்டத்தில் நடைபெறவுள்ள போட்டிக்காக 15 வயதிற்குற்பட்ட உதைப்பந்தாட்ட அணி ஒன்று தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts